'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரதேசி, யா யா, திறந்திடு சீசே படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்துள்ளார் தன்ஷிகா. அதில், ரஜினியின் கபாலி குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதலில் அவர் ரஜினியின் மகளாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் பெண் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் வெளியானது. ஆக, இந்த படத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் வேடத்தில் நடித்துள்ளார் தன்ஷிகா. ஆக, பரதேசி தன்ஷிகாவாக இருந்த அவர், ரஜினி படத்தில் கமிட்டான பிறகு கபாலி தன்ஷிகாவாகி விட்டார்.
இந்த நிலையில், ரஜினியின் கபாலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே இப்போது பிரதாப்போத்தன் இயக்கத்தில் மாதவன்-துல்கர்சல்மான் நடிக்கயிருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் தன்ஷிகா. இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராவதால், கபாலி வெளியாவதற்கு முன்பே தனக்கு திரையுலகில் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் இருக்கும் தன்ஷிகா, அடுத்தபடியாக கேரக்டர் வேடங்களை தவிர்த்து விட்டு வெயிட்டான கதாநாயகி வேடங்களை தேடத் தொடங்கியிருக்கிறார். அதோடு, சமுத்திரகனி நிறுத்தி வைத்துள்ள கிட்னா படத்திலும் தன்ஷிகாதான் நாயகியாக நடிக்கயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.