ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மலையாள டிவி சேனல் ஒன்று வாரம் தவறாமல் ஒரு படத்தை திரும்ப திரும்ப போட்டு வியாபார ரீதியாக ட்.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தி கல்லா கட்டுகிறது என்றால நம்ப முடிகிறதா..? அந்தப்படம் தான் மம்முட்டியும் பிருத்விராஜும் இணைந்து நடித்த படமான 'போக்கிரி ராஜா'. அந்த அளவுக்கு மம்முட்டி-பிருத்விராஜுக்கு ரசிகர்களிடம் கிரேஸ் இருக்கிறது. தற்போது மோகன்லாலின் 'புலி முருகன்' படத்தை இயக்கி வருகிறாரே அந்த வைசாக் தான் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அதன்பின் மம்முட்டி நடித்த 'முன்னறியிப்பு' என்கிற படத்தில் மம்முட்டியை ஒரு பிரேமில் கூட சந்திக்காத ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் பிருத்விராஜ்..
இதெல்லாம் மம்முட்டி மீது தான் வைத்திருக்கும் அன்பை, மரியாதையை வெளிப்படுத்துவதற்காக பிருத்விராஜ் செய்த விஷயங்கள்.. அடுத்து இன்னொன்றையும் செய்தார். கடந்த 2013ல் மம்முட்டியை வைத்து ரஞ்சித் டைரக்சனில் 'கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி' என்கிற படத்தை தானே சொந்தமாக தயாரித்தார்.. படம் அவ்வளவாக போகவில்லை தான்.. ஆனாலும் இப்போது மீண்டும் மம்முட்டியை வைத்து தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலமாக 'மை டாடி டேவிட்' என்கிற படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த பிரபலங்கள் ஒன்றுகூடும் படத்தை டைரக்ட் பண்ண இருப்பது ஹனீப் என்கிற ஒரு அறிமுக இயக்குனர் தான்.