ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முனி-2 காஞ்சனா படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்தவர் ராய் லட்சுமி. அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு லாரன்ஸ் நடிப்பதாக இருந்த ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா -என்ற படத்திலும் நாயகியாக ராய்லட்சுமிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், வெற்றிப்படத்தில் நடித்தபோதும் அதற்கடுத்து சரியான படவாய்ப்பு கள் இல்லாமல், தெலுங்கு, இந்தி என்று நடித்து வந்தார்.
அதோடு, தெலுங்கில் சர்தார் கப்பார்சிங் உள்ளிட்ட சில படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடிய ராய்லட்சுமி, தற்போது தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திலும் ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து நடனமாட உள்ளார். காஞ்சனா படத்தில் இடம்பெற்ற கருப்பு பேரழகா, சங்கிலி புங்கிலி... போன்ற பாடல்களை விடவும் பார்ஸ்ட் பீட் பாடல் இந்த படத்துக்காக உருவாகியிருக்கிறதாம். அதனால் அந்த பாடலுக்கு நடனம் அமைக்கும் லாரன்ஸ், முன்கூட்டியே ராய் லட்சுமிக்கு ரிகர்சல் கொடுத்து களமிறக்கப்போகிறாராம்.