தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பில்ல ஜமீந்தார் படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் அசோக், அனுஷ்கா நடிப்பில் பாஹ்மதி எனும் வரலாற்று திரைப்படத்தை இயக்கவுள்ளார். யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் பாஹ்மதி எனும் முதன்மை வேடத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். அருந்ததி, பாகுபலி, ருத்ரம்மாதேவி என அனுஷ்கா சரித்திரப் படங்களில் நடித்து வெற்றி கண்டிருந்தாலும், அவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் இறுதியாக திரைக்கு வந்த இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
இதனால் பாஹ்மதி படத்தை தயாரிக்க யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தார் தயங்கியுள்ளனர். ஆனால் அந்நிறுவனத்துடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் பாகுபலி நாயகன் பிரபாஸ், தேவைப்பட்டால் தான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் இப்படத்தை தாங்களே தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பிரபாஸின் வேண்டுகோளை ஏற்று யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தாரும் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். பிரபாஸின் மிர்ச்சி எனும் சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த யுவி கிரியேசன்ஸ் தற்போது பிரபாஸ் நடிக்கும் பாகுபலி 2 படத்தையும் தயாரித்து வருகின்றது.