யூப்-டிவி இணையத்தில் தோழா-வை பார்க்கலாம் - YuppTV announces the digital premiere of Oopiri and Thozha
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

யூப்-டிவி இணையத்தில் 'தோழா'-வை பார்க்கலாம்

03 மே, 2016 - 12:34 IST
எழுத்தின் அளவு:
YuppTV-announces-the-digital-premiere-of-Oopiri-and-Thozha

பிரபல இணையதள டிவி சேனல் யூப்-டிவி. காலத்திற்கு தகுந்தவாறு தன்னுடைய தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்தும் யூப்-டிவி, ரசிகர்களின் தேவையை அறிந்து நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட ஆசிய கோப்பை டுவென்டி-20 போட்டிகள் நடந்தபோது அதை ஒளிப்பரப்பு செய்தது. இந்நிலையில் இப்போது படங்களையும் ஒளிப்பரப்பு செய்ய தொடங்கியுள்ளது.


சமீபத்தில், நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் தமிழில் 'தோழா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஊப்பரி' என்ற பெயரிலும் படமாக வெளிவந்தது. வம்சி இயக்கிய இப்படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. இப்படங்களை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் யூப்-டிவி இணையதளம் டிஜிட்டலில் அதிக தரத்துடன் வெளியிட்டுள்ளது. இதை யூப்-டிவி இணையதளம் வாயிலாகவோ அல்லது யூப்-டிவியின் ஸ்மார்ட் டிவி, ஆப் போன்றவற்றிலும் இப்படத்தை காணலாம்.


இதுகுறித்து யூப்-டிவியின் தலைமை அதிகாரி உதய் ரெட்டி கூறுகையில், ''யூப்-டிவி இணையதளம் எப்போதும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. அதன்படி இந்த படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும். யூப்-டிவியின் அனைத்து பிளாட்பார்மிலும் இதை காணலாம் என்று கூறியுள்ளார்.


Advertisement
சின்னத்திரை நடிகர்களின் தற்கொலையை தடுக்க புதிய முயற்சி!சின்னத்திரை நடிகர்களின் தற்கொலையை ... நானும், சமந்தாவும் உயிர்த்தோழிகள்! -தொகுப்பாளினி ரம்யா நானும், சமந்தாவும் உயிர்த்தோழிகள்! ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in