இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியை நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. அதோடு இப்படத்தில் அவர் இன்டர்நேஷனல் டானாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாக ஆரம்பித்ததும், 'கபாலி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்தது. ரஜினி ஏற்கனவே டானாக நடித்த பாட்ஷா படம்தான் இதுவரை ரஜினி படங்களிலேயே உச்சமாக கருதப்பட்டு வருகிறது.
கபாலி படத்தைப்பற்றி வெளிவரும் செய்திகள், பாட்ஷா படத்தை கபாலி மிஞ்சக்கூடும் என்ற கணிப்பை ஏற்படுத்தி வருகிறது. கபாலி படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 'கபாலி' படத்தின் டீஸர் மே 1 ஆம்தேதி காலை 11 மணியளவில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. ரஜினியின் பன்ச் வசனங்களுடன் உருவாகியுள்ள இந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கபாலி டீஸர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளாகவே 50 லட்சம் பேர் அதை பார்த்து ரசித்தனர். இந்திய அளவில் இது ஒரு புதிய சாதனை. அதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கபாலி டீஸரை 'லைக்'கும் செய்துள்ளார்கள். இதுவும் ஒரு புதிய சாதனைதான். இவை எல்லாம் ஒரு நாள் சாதனை என்றால், இரண்டாவது நாளிலம் சாதனைகள் தொடர்கின்றன.
48 மணி நேரத்திற்குள் 80, 32,443 பேர் கபாலி டீஸரை பார்த்துள்ளனர். 2,84,863 லைக் செய்துள்ளதோடு, கலைப்புலி தாணுவின் யுயூப் பக்கத்தை 1,03,287 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். கபாலி டீஸர் வெளியாவதற்கு முன் இந்தப் பக்கத்தை 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே சப்ஸ்கிரைப் செய்திருந்தனர். கபாலி டீஸரைப் பார்த்துவிட்டு 14,994 கமெண்ட் செய்துள்ளனர். இதுவரை, யு ட்யூப்பில் வெளிவந்துள்ள ஒட்டுமொத்த இந்திய சினிமா படங்களின் டீஸர்/டிரைலர் சாதனைகளை 'கபாலி' முறியடித்துள்ளது.