வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் சிலவாரங்களுக்கு முன்னர் வெளியான படம் 'ஃபேன்'. ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடித்த இப்படத்தை மனீஷ் சர்மா இயக்கியிருந்தார். ஷாரூக்கானுக்கு இப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துள்ளது. இப்படம் வெளியான இதுநாள் வரை சுமார் ரூ.85 கோடி தான் வசூலித்திருக்கிறது. இன்னும் ஓரிரு வாரம் ஓடினாலும் இப்படம் மேலும் ரூ.2 கோடி தான் வசூலிக்கும் என்கிறார்கள். ஆகமொத்தத்தில் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவில்லை. 'ஃபேன்' படத்திற்கு முன் வெளியான ஷாரூக்கானின் 'தில்வாலே' படமும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த 6 ஆண்டுகளில் ஷாரூக் நடிப்பில் வெளியான படங்களில் 'ஃபேன்' படம் தான் ரூ.100 கோடி கிளப்பில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.