ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் அனில்கபூரின் வாரிசு சோனம் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ள சோனம்கபூர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் 'நீர்ஜா'. விமானப்பணிப்பெண் நீர்ஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானதுடன், சோனம்கபூரின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் அனில்கபூரும் தனது மகளை ஆஹா ஓஹோ என புகழ்ந்துள்ளார்.
அனில்கபூர் கூறியுள்ளதாவது... ''சோனம் கபூரை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். நிஜ வாழ்க்கையில் சோனம் கபூர் எப்படி இருக்கிறாரோ அதேப்போன்று சினிமாவிலும் பிரதிபலிக்கிறார். சமீபகாலமாக படங்களில் நிறைய மாற்றம் வந்துள்ளது. விளையாட்டு வீரர்கள், தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு போன்றவை படங்களாக உருவாகி வருவதுடன் வெற்றியும் பெற்று வருகின்றன. நீர்ஜா படமும் நீர்ஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் தான். நீர்ஜா படம் வெளிவந்த பிறகு அவருக்கான புகழ் மேலும் அதிகமாகியுள்ளது. சோனம் மூலமாக நீர்ஜாவை பற்றி மக்கள் இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டனர். அதற்கு பக்கபலமாக நல்ல வலுவான கதையும், சோனமின் அற்புதமான நடிப்பும் அமைந்தது என்று கூறியுள்ளார்.