‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின், ரயீஸ் திரைப்படம் வெளியாவதை எதிர்த்து, நிஜ தாதாவின் மகன், 101 கோடி ரூபாய் நஷ்ட
ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து, நடிகர் ஷாருக் கானின் மனைவி கவுரி இணைந்து தயாரிக்கும், ரயீஸ் திரைப்படம், வரும் ஜூலை, 6ல் திரையிடப்பட உள்ளது.
ராகுல் டோலக்யா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், ஷாருக்குடன், நவாஜூத்தீன் சித்திக், மஹிரா கான் ஆகியோர் நடித்துள்ளனர். பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தில், ஷாருக், தாதாவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை, 1980களில், குஜராத் மாநிலத்தில், சாராய வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த, அப்துல் லத்தீப் என்ற தாதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
இந்நிலையில், அப்துல் லத்தீப்பின் மகன், முஷ்தாக் அஹமது, தன் தந்தையின் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளதால், படத்தின் மீதமுள்ள பணிகளை உடனே நிறுத்தும்படியும், 101 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த, ஆமதாபாத் நீதிமன்றம், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதனால், ஜூலை, 6ல், ரயீஸ் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.