மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி வில்லன்களில் ஒருவர் அடில் உசைன். இந்தி மட்டுமின்றி நிறைய ஆங்கில படங்களிலும் நடித்துள்ள இவர், பெங்காலி, அசாம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்த யட்சன் படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் அவர் கமிட்டாகியிருப்பதாக இப்போது புதிய செய்தி வந்துள்ளது.
இதே படத்தில் இதற்கு முன்பு ரஜினியுடன் அக்சய்குமார், சுதன்ஷூ பாண்டே ஆகியோர் நடித்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இப்போது இன்னொரு வில்லனாக அடில் உசைன் கமிட்டாகியிருக்கிறார். இதுவரை நடித்துள்ள படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ள அவர், இந்த படத்திலும் மிரட்டலான ஒரு நெகடீவ் ரோலில்தான் நடிக்கிறாராம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜூன் மாதம் பொலிவியா நாட்டில் படமாக்குகிறாராம் ஷங்கர்.