பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்பு நடிப்பில் வாலு வெளியாதை அடுத்து இது நம்ம ஆளு ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளியான திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. அந்த படத்தில் அவர் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
மேலும், அப்படத்திற்கு ஏஏஏ என்று டைட்டீல் வைத்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கான விரிவாக்கம் என்ன என்பதை தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிரிபிள் ஏ என்றால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் -என்று குறிப்பிட்டுள்ளனர். அதோடு, ஆண்டவன்தான் ஓட்றான் உன்னையும் போட்டு ஆட்டுறான் -என்றும் ஒரு பஞ்ச் டயலாக் போன்ற வாசகத்தையும வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறதாம்.