ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் மகன் உதயநிதி நடித்துள்ள, மனிதன் படத்திற்கு, கேளிக்கை வரி விலக்கு மறுக்கப்பட்டு உள்ளது.மனிதன் தமிழ் திரைப்படத்தை பார்வையிட்ட, தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரை விவரம்:
பரமேஸ்வரன், இணை ஆணையர், வணிக வரித்துறை: இப்படம், தணிக்கை வாரியத்திடம் இருந்து, யு சான்றிதழ் பெற்றுள்ளது. திரைப்படத்தின் தேவையை கருதி, பிற மொழிகளை பயன்படுத்தும் காட்சிகளை தவிர, பெருமளவில் இத்திரைப்பட வசனங்கள் தமிழ் மொழியில் உள்ளன. கதையின் கரு, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை. நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள், கடைத்தெருவில் நடக்கும் நிகழ்வுகள் போல் உள்ளன.
நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கறிஞரிடம், ஓ.எம்.ஆர்.,இல் உள்ள, மூன்று படுக்கை அறை கொண்ட பிளாட் வேண்டும் என, கேட்பது போன்ற, கேவலமான நிகழ்வுகள் ஏற்புடைய தல்ல. நீதிமன்றத்தில் நடந்த சண்டைக்காட்சி, நீதிமன்றத்தை அவமதிப்பு செய்வதாகும். அகல் விளக்கு மூலம் வழக்கறிஞர் சிகரெட்டை பற்ற வைத்தல் போன்ற காரணங்களால், இப்படம் கேளிக்கை வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.
தியாகராஜன், துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம்: இப்படம், யு சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில் வன்முறை, ஆபாசம் இல்லை. பிற மொழி கலப்பு குறிப்பிடும்படி இல்லை. தமிழ் பண்பாட்டிற்குரியதாக உள்ளது. எனினும், படத்தின் தலைப்பு மனிதன் என்பது சமஸ்கிருத சொல். எனவே, வரி விலக்கு வழங்க பரிந்துரைக்க இயலவில்லை. மனிதன் என்பதற்கு, மாந்தன், மாந்தர் என்பதே தமிழ்ச் சொல் ஆகும்.
அனந்தகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர்:தலைப்பு தமிழில் உள்ளது. ஆபாசம், வன்முறை இல்லை. தமிழ் சீராக உள்ளது. அரசாணை நிபந்தனைக்குட் பட்டுள்ளதால் கேளிக்கை வரி விலக்கிற்கு தகுதியானது.ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர்: ஆபாசமோ, வன்முறையோ இல்லாமல், ஒரு நல்ல கருத்தை சொல்லி இருக்கின்றனர். வரி விலக்கு அளிக்கலாம்.
ராஜஸ்ரீ, பழம்பெரும் நடிகை: நீதிமன்ற காட்சி யில் வழக்கறிஞர் ஆதிசேஷன், நீதிபதியை ஆவேசப்படுத்தி, அவரை தன்னிலை இழக்கச் செய்து, கையில் கிடைத்ததை எடுத்து எறியும் அளவிற்கு, வழக்கறிஞரின் நடவடிக்கைகள் இருந்தன.இவை நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் இருந்தன. நடைமுறைக்கு ஒவ்வாததாகவும், நீதிமன்றத்தின் மேல் பொதுமக்கள் நம்பிக்கை இழைக்கும் வகையிலும் இருப்பதால், இப்படம் அரசாணை நிபந்தனைக்கு உட்படாததால், கேளிக்கை வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.இவ்வாறு உறுப்பினர் கள் பரிந்துரை செய்துஉள்ளனர்.
ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர், கேளிக்கை வரி விலக்கு அளிக்க, தகுதியானது அல்ல என்றும்; இருவர், தகுதியானது என்றும் பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை உறுப்பினர்கள், பரிந்துரை செய்யவில்லை. எனவே, மனிதன் தமிழ் திரைப்படத்திற்கு, கேளிக்கை வரி விலக்கு அளிக்க இயலாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.