Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடியாய் கலக்கும் கபாலி டீசர்...

01 மே, 2016 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Kabali-teaser-launched

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த கபாலி டீசர் இன்று காலை 11 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 5 நிமிடங்களுக்குள்ளேயே 40000 பார்வையாளர்களைக் கடந்தும், 20 நிமிடங்களுக்குள் 40000 லைக்குகளைக் கடந்தும் அதிரடியான சாதனைக்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கிறது கபாலி டீசர்.

ரஜினியின் ஸ்டைலான நடையுடன் ஆரம்பமாகும் டீசர், அட்டகாசமான சிரிப்புடன், இரண்டு உதை, ஒரு துப்பாக்கி சுடல், “தமிழ்ப் படங்கள்ல இங்க மரு வச்சிக்கிட்டு, மீசையை முறுக்கிக்கிட்டு, லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியாரு...ஏ காபலி...அப்படின்னு சொன்ன உடனே, குனிஞ்சி சொல்லுங்க எஜமான், அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நினைச்சியாடா...” என்ற அதிரடி வசனத்துடன், ஓங்கி ஒரு உதை...அப்புறம்...கபாலிடா.... என அவருக்கே உரிய ஸ்டைலுடன்...80களின் வித்தியாசமான தோற்றத்துடன், தலையைக் கோதிவிட்டு, ஒரு ஸ்டைலான இளம் ரஜினிகாந்தின் நடை, பின் மகிழ்ச்சி என ரஜினி சொல்வதுடன் இந்த 66 செகன்ட் கபாலி டீசர் முடிகிறது.

இடையில் வில்லன் நடிகர் கிஷோர், நாயகி ராதிகா ஆப்தே..இருவர் மட்டுமே வந்து போகும் டீசர் இன்றைக்குள் பல புதிய சாதனைகளைப் படைக்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் இந்த டீசருக்காக பலரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in