பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
என்னதான் விஜய்-அஜீத்துக்கென்று தனித்தனி ரசிகர் வட்டம் இருந்தபோதும், ரஜினிக்கான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ரஜினியின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் இளவட்ட ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக அவரது படத்திற்கும் பெரிய ஓப்பனிங்கை கொடுத்து வருகிறார்கள். அவருக்கான மாஸ் அப்படியே இருப்பதினால்தான் இப்போதும் ரஜினியை வைத்து தைரியமாக பிரமாண்ட பட்ஜெட்டில் படமெடுக்கிறார்கள். அதோடு, விஜய்-அஜீத் படங்களுக்கு இணையாக ரஜினியின் கபாலி படமும் ஆரவாரத் துடன் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று மே 1-ந்தேதி ரஜினியின் கபாலி டீசர் காலை 11 மணிக்கு யு-டியூப்பில் வெளியாகிறது. இதனால் கபாலி டீசரை பெரிய அளவில் இணையதளங்களில் டிரண்டு செய்ய ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், கபாலி டீசரை இன்று நெல்லையிலுள்ள ராம் முத்து ராம் தியேட்டரிலும் விஜய்யின் தெறி படத்துடன் வெளியிடுகிறார்களாம். அதனால், ரஜினி-விஜய் ரசிகர்கள் நேற்றே போட்டா போட்டியில் டிக்கெட்டு களை முன்பதிவு செய்து விட்டார்களாம்.