பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் டெல்லி கணேஷ். கமலுக்கு இவர் மிகவும் பிடித்தமான நடிகர். தனது படங்களில் பெரும்பாலும் டெல்லிகணேசுக்கு சான்ஸ் கொடுத்து வந்துள்ளார் கமல். மேலும், 36 வயதினிலே, பாபநாசம் என சமீபத்தில் சில படங்களில் நடித்தவர் இப்போது அகராதி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது மகனான மகாவை என்னுள் ஆயிரம் என்ற படத்தில் ஹீரோவாக்கினார் டெல்லி கணேஷ். மகனை வைத்து படம் தயாரிக்க மற்றவர்களை நாடாமல், லாபமோ நஷ்டமோ நானே ஏற்கிறேன் என்று தான் நடித்து சம்பாதித்த வீட்டை விற்று என்னுள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்தார் டெல்லிகணேஷ்.
அதோடு, முழுக்க முழுக்க கதையை நம்பி களமிறங்கிய அவர், அந்த படத்தில் தனக்கான கேரக்டர் எதுவும் இல்லை என்பதால் தான் நடிக்கவில்லை. தயாரிப்பாளராக மட்டுமே இருந்தார். ஆனால் கடந்த வாரம் வெளியான என்னுள் ஆயிரம் படம் வெளியான தியேட்டர்களில் வசூல் இல்லை. இதனால் தயாரிப்பாளரான டெல்லிகணேசுக்கு 3 கோடி செலவு செய்து 3 லட்சம் மட்டும் தான் வசூலானதாம். அதையடுத்து, சினிமாவில் இதுவும் எனக்கொரு பாடம் தான். ஒரு தயாரிப்பாளருக்கு எத்தகைய பிரச்னை உள்ளது என்பதை இந்த படம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் டெல்லி கணேஷ்.