ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் துருவா படத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கின்றார். ராம் சரணுடன் ப்ரூஸ் லீ படத்தில் இணைந்து நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் துருவா படத்திலும் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கின்றார். ஐதராபாத் மற்றும் பாங்காங்கில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த துருவா படக்குழு மே முதல் வாரத்தில் காஷ்மீருக்கு படப்பிடிப்பு நடத்த செல்லவுள்ளது. ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கின்றார்.