'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 15ந் தேதி இந்தியாவில் வெளியான ஜங்கிள் புக் இதுவரை இந்தியாவில் வெளிவந்த ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மூன்றாவது வாரத்தின் முடிவில் 153 கோடியே 61 லட்சம் வசூல் செய்திருக்கிறது. மூன்றாவது வாரத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை 3.58 கோடியையும், சனிக்கிழமை 6.65 கோடியையும், ஞாயிற்றுக்கிழமை 8.69 கோடியையும், திங்கட்கிழமை 3.02 கோடியும், செவ்வாய்கிழமை 3.01 கோடியும், புதன் கிழமை 2.27 கோடியும் வியாழக்கிழமை 2.67 கோடியுமாக இதுவரை 153 கோடியே 69 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்திய கதையான ஜங்கிள் புக்கில் இந்திய சிறுவனான நீல் சேத்தி நடித்திருப்பதுதான் இந்த சாதனைக்கு காரணம் என்கிறார்கள். கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமைந்து விட்டதும் காரணம் என்கிறார்கள். பல நடுத்தர குடும்பங்களின் மினி கோடை விடுமுறை சுற்றுலாவே ஜங்கிள் புக் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. 3டி தொழில்நுட்ட தியேட்டர்கள் அனைத்தும் மே மாதம் இறுதி வரை புக் செய்யப்பட்டுவிட்டது. கோடை முழுவதும் வசூலை குவித்து விடும் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 300 கோடி வரை வசூலிக்கும் என்று கணக்கிடுகிறார்கள்.