இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மிமிக்ரி கலைஞரான சின்னி ஜெயந்த், 'கை கொடுக்கும் கை' படத்தின் மூலம் அப்பாவி வில்லனாக அறிமுகமானார், அதன் பிறகு காமெடியில் தனக்கென தனி பாணி வகுத்துக்கொண்டு பயணித்தார். சின்னத்திரை விஸ்வரூபம் எடுத்த பிறகு அவர் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சந்தானத்துடன் இவர் தொகுத்து வழங்கிய சகலை ரகளை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதிக சினிமா வாய்ப்பு இல்லாமல் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்த சின்னி ஜெயந்த் இப்போது குணசித்திர நடிகராக தனது அடுத்த ரவுண்டை தொடங்கியிருக்கிறார்.
சாட்டை அன்பழகன் இயக்கும் படத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இட்லி கடை நடத்தும் ஏழையாக நடிக்கிறார். பிரபு சாலமன் இயக்கும் தொடரி படத்தில் ரெயில்வே ஊழியராக நடிக்கிறார். ரூபாய் என்ற படத்தில் 60 வயது முதியவராக நடிக்கிறார். இன்னும் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சின்னி ஜெயந்தின் இந்த மாற்றமும் தோற்றமும் அவரின் நடிப்பு திறமையின் இன்னொரு பரிமாணத்தை கொண்டு வரும் என்கிறார்கள்.