சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
நடிகை ஸ்ருதிஹாசன் முதன்முறையாக தன் அப்பா கமல்ஹாசன் உடன் முழுநீள படத்தில் நடிக்க இருக்கும் படம் 'சபாஷ் நாயுடு'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தை ராஜீவ் குமார் இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை, நடிகர் சங்க வளாகத்தில் இன்று சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசியதாவது... எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சினிமா தொடர்பான எல்லா விஷயங்களையும் எனக்கு கற்றுக்கொடுத்தது என் அப்பா தான். அவர் தான் என்னுடைய குரு. அப்பாவுடன் இணைந்து நடிப்பது பெருமையாக இருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸில் நடிப்பது மகிழ்ச்சி. அப்பா, பூஜை எல்லாம் நம்பமாட்டார். ஆனால் இந்த கட்டடத்தில் இருக்கும் எல்லோருடைய ஆசீர்வாதமும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நம்புபவர், எல்லோருக்கும் நன்றி என்று கூறினார்.