பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ராஜமெளலி இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ராம்சரண் நடித்த 'மகதீரா' படமும் ஒன்று. சரித்திரம் மற்றும் நிகழ்காலம் இரண்டையும் கலந்து அருமையாக கொடுத்திருந்தார் ராஜமெளலி. இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இருதினங்களுக்கு முன்னர் கூட சாஜித் நாடியாவாலா, இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.
ஆனால், இப்போது சஞ்சய் லீலா பன்சாலி, இப்படத்தை ரீ-மேக் செய்ய இருப்பதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட முறையில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.