தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தை விக்ரம் குமர் இயக்கி உள்ளார். மே 6ந் தேதி படம் வெளிவருகிறது. இதுகுறித்து சூர்யா கூறியதாவது:
36 வயதினிலே, பசங்க 2 வை தொடர்ந்து எனது தயாரிப்பில் வரும் அடுத்த படம் 24. இயக்குனர் விக்ரம் குமருடன் வேலை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அது இப்போது நிறைவேறியிருக்கிறது. நிறைய படங்களில் நடித்தாலும் சில படங்கள்தான் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும், நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, சிங்கம் மாதிரியான படங்கள் அப்படி எனக்கு அமைந்தது. அந்த வரிசையில் வருகிற படம்தான் 24.
ரசிகர்களை திருப்பி படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். அவர்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் புதிதாக இருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் நிறைய இருக்கும். தவறான படங்களை விமர்சிக்கும்போதுதான் நல்ல கதைகளை தேடித் தேடி நடிக்க வேண்டியதிருக்கிறது. இதுதான் ஆரோக்கியமான விஷயம். நானும் முடிந்தவரை நல்ல கதைகளை தேடிச் செல்கிறேன். என்றார் சூர்யா.