ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்பெல்லாம் மும்பையில் இருந்து சுத்தமாக மொழி தெரியாமல் வரும் நடிகைகளுக்கே அதிகமாக சான்ஸ் கொடுத்து வந்த கோடம்பாக்கத்தில், சமீபகாலமாக தமிழ் பேசும் நடிகைகளுக்கே கூடுதல் முன்னுரிமை கொடுக்கிறார்கள். மொழி தெரியாதவர்கள் தங்களது மொழியில் டயலாக்கை எழுதி வைத்துக்கொண்டு பேசினால் பின்னர் டப்பிங் கொடுக்கும்போது உதடு அசைவுகள் சரியாக இல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறதாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கத்தான் இப்போதைய வெளிமாநில நடிகைகள் வந்த வேகத்திலேயே தமிழை தீவிரமாக பேச பயிற்சி எடுக்கிறார்கள்.
அந்த வகையில், நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள் தமிழில் டப்பிங் பேசும் அளவுக்கு தயாராகி விட்டனர். இந்த நிலையில், டார்லிங், யாகவராயினும் நாகாக்க படங்களில் நடித்த நிக்கி கல்ராணியும் தற்போது தீவிரமாக தமிழ் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். கோ-2 படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் தனக்குத்தெரிந்த தமிழை பேசத் தொடங்கிய நிக்கி கல்ராணி, தற்போது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களில் நடித்தபோது ஓரளவு தமிழில் பேச ஆரம்பித்து விட்டார். அதனால், விரைவில் தமிழில் டப்பிங் பேசும் அளவுக்கு நான் தயாராகிவிடுவேன் என்றும் கூறி வருகிறார் நிக்கி கல்ராணி.