தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் அவரது நண்பனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் ராணா. அதைத்தொடர்ந்து பாகுபலி, பெங்களூர் நாட்கள் போன்ற படங்களில் நடித்த ராணா, கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதோடு, தமிழ், தெலுங்கில் தயாராகும் பாகுபலி-2விலும் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், விரைவில் அவர் ஒரு தமிழ்ப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
கிருஷ்ணா நடித்த கழுகு படத்தை இயக்கியவர் சத்யசிவா. அவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் ராணாதான் நாயகனாக நடிக்கிறாராம். அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும் படம் என்பதால் இரண்டு மொழியிலும் பிரபலமான சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார்கள்.