தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இவன் வேற மாதிரி படத்தில் நாயகி சுரபியின் தங்கையாக நடித்தவர் மாளவிகா மேனன். கேரளத்து நடிகையான இவர், அதன்பிறகு தமிழில் மகேந்திரன் நடித்த விழா படத்தில் நாயகியானார். தொடர்ந்து வெத்து வேட்டு, நிஜமா நிழா போன்ற படங்களில் நடித்தவர் இப்போதும் மலையாளத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்காலிகமாக தமிழ்ப்படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்.
அதுகுறித்து காரணம் கேட்டால், நான் இப்போதுதான் ப்ளஸ்-2 படித்துக்கொண்டிருக்கிறேன். இதையடுத்து கல்லூரி படிப்பை தொடரும் ஐடியா உள்ளது. அதனால் இந்த நேரத்தில் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து மற்ற மாநிலங்களுக்கு நடிக்க சென்றால் படிப்புக்கு பிரச்சினை ஏற்படும். அதனால் சில மாதங்களுக்கு மற்ற மொழிப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருக்கிறேன் என்கிறார். ஆனால், இன்னும் சில மாதங்களுக்குப்பிறகு சென்னையில் சில முன்னணி டைரக்டர்கள் நேரில் சென்று சந்தித்து படவேட்டை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் பக்கா கமர்சியல் நடிகையாகி இருப்பேன் என்கிறார் மாளவிகா மேனன்.