தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். 'ஹீரோபன்டி' படத்தின் மூலம் அறிமுகமான டைகர் ஷெரப், முதல்படத்திலேயே ஆக்ஷ்ன் ஹீரோவாக அவதரித்தார். இப்படத்தையடுத்து இரண்டாண்டுகளுக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் பாகி. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் டைகர் ஷெரப், அளித்த பேட்டி ஒன்றில் தன் அப்பாவின் பரீந்தா ரீ-மேக்கில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... ''என் அப்பா நடித்த எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். அதிலும் எனது மனதை மிகவும் தொட்ட படம் அவர் நடித்த பரீந்தா தான். ஆகையால் அந்தப்படத்தை யாராவது ரீ-மேக் செய்தால் அதில் நடிக்க நான் தயாராக உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.