ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோபிசந்த் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் ஆக்சிஜன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை ஸ்ருதிஹாசன் இன்று(ஏப்ரல் 28) வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். நடிகை அணு எமானுவேல் மற்றும் நடிகை ராக்ஷி கண்ணா இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யாவுடன் ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் சூர்யா நடிக்கும் சிங்கம்- 3 படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.