பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் யாவரும் நலம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் தெலுங்கில் நாகார்ஜுனா, அவரது தந்தையும் மூத்த நடிகருமான நாகேஸ்வர ராவ், நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து இயக்கிய மனம் எனும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது சூர்யா மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் 24 எனும் சடின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ள விக்ரம் குமார். அப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாகவுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் 24 படத்தில் நித்யா மேனன், சமந்தா என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பின்னர் விக்ரம் குமார் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாகக் கூறியுள்ளார். அப்படமும் இரு மொழிகளில் திரைக்கு வரும் என்றும் விக்ரம் தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவிடமும் விக்ரம் குமார் தனது அடுத்த படத்திற்கான கதையைக் கூறியுள்ளாராம். முதலில் அல்லு அர்ஜுன் படத்தை முடித்த பின்னர் மகேஷ் பாபு படத்தை இயக்கவும் விக்ரம் குமார் திட்டமிட்டுள்ளாராம்.