‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுபோக்கு திரைப்படம் மே 20ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் பிரம்மோற்சவம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகளுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க ஹிந்தி நடிகை ப்ரணீத்தி சோப்ராவை படக்குழு அணுகியது. அவர் மறுப்பு சொல்லவே பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோணை முருகதாஸ் இப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார்.
மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என பல முறை தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ள தீபிகா படுகோண் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாராம். முருகதாஸிடம் இப்படத்தில் நடிக்க தீபிகா சம்மதம் தெரிவித்து விட்டாராம். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மே இறுதியில் துவங்கும் என கூறப்படுகின்றது.