மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபு சாலமனிடம் உதவியாளராக இருந்த பிரகாஷ் சந்திரா கோரிப்பாளையம் படத்தின் மூலம் நடிகரானார். அந்தப் படத்திலும் அதன் பிறகு வெளிவந்த முத்துக்கு முத்தாக படத்திலும் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். பல வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது அவர் சாவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக சுனு லட்சுமி நடித்திருக்கிறார். 'தி ஸ்பார்க்லேண்ட்' என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. புதுமுகம் ஆர்.சுப்பிரமணியம் இயக்கி உள்ளார். சதீஷ் தானியப்பன் இசை அமைத்துள்ளார், சேகர் ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“எல்லோருடைய பிரச்சினைகளையும் சாவியா இருந்து திறந்து விடும் ஹீரோவை பல பிரச்சினைகள் பூட்டு போட்டு பூட்டிவிடுகிறது. தன்னை பூட்டிய பூட்டுகளை அவன் எப்படி திறக்கிறான் என்பதுதான் கதை. கூடல்நகர் தான் கதையின் களம். சுட்டெரிக்கும் வெயிலில் அங்கு படப்பிடிப்பை நடத்தி விட்டு, குளுகுளு கொடைக்கானலில் பாடல் காட்சியை எடுத்துவிட்டு திரும்பியிருக்கிறோம். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டு வருகிறோம் என்கிறார் இயக்குனர் சுப்பிரமணியன்.