இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்டு. நம் விஷயத்தில் இந்த பழமொழி பலித்து விடுமோ என்ற பயத்தில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இவர், தமிழில் அறிமுகமான, இது என்ன மாயம் என்ற படம், தோல்வியடைந்தது தான், இதற்கு காரணம். ஆனாலும், ரஜினி முருகனுக்கு கிடைத்த வரவேற்பு, அவரது நம்பிக்கையை அதிகரித்தது. அடுத்ததாக, தனுஷுடன், தொடரி படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனாலும், பெரிய மீனாக பிடிப்பதற்கு துாண்டில் போட்டு காத்திருந்த கீர்த்திக்கு, திமிங்கிலமே சிக்கியுள்ளது. ஆம்; விஜய் நடிக்கும், 60வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு, கீர்த்தியை தேடி வந்துள்ளது. இதனால், இந்த இரு படங்களையும் வைத்தே, இன்னும் சில ஆண்டுகளை ஒப்பேற்றி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம் கீர்த்திக்கு.