அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
இன்றைய இளம் ஹீரோக்களில் வித்தியாசமானவர் விஷால் தான். தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல தொழில் வாழ்க்கையிலும் மற்ற ஹீரோக்களிடமிருந்து வேறுபட்டிருக்கிறார். உதாரணத்துக்கு.. தன்னுடைய படங்களை வெளியிடும் தேதியை தீர்மானித்துவிட்டால் அந்த தேதியில் எத்தனை பெரிய ஹீரோ நடித்த படம் வெளியானாலும் கவலைப்பட மாட்டார். மற்ற ஹீரோக்களோ தன்னுடைய படம் வெளியாகும்போது மற்ற ஹீரோக்கள் படம் வெளிவருவதை விரும்பமாட்டார்கள்.
இந்த விஷயத்தில் விஷால் டென்ஷனாகவே மாட்டார். 'கொம்பன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ள 'மருது' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய 'கொம்பன்' படத்தை போலவே இப்படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ளது. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டநிலையில், பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு பிறகு 'மருது' படத்தை மே மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அதே தேதியில் இது நம்ம ஆளு படம் வெளிவர உள்ளதாக விஷாலுக்கு சொல்லப்பட்டது. அவரோ அதைப் பற்றி கவலையேப்படாமல் மருது படத்தை மே மாதம் 20 ஆம் தேதிதான் ரிலீஸ் செய்ய வேண்டும் உறுதியாக சொல்லி விட்டாராம்.