தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நயன்தாரா, இந்தப் பெயரைக் கேட்டாலே 60 வயது நடிகர்கள் முதல் 30 வயது நடிகர்கள் வரை கொஞ்சம் மயங்கித்தான் போகிறார்கள். 30 வயதைக் கடந்த ஒரு ஹீரோயினுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கில் கூட தவமாய்த் தவமிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் முதல் சிரஞ்சீவி வரை நயன்தாரா தான் ஜோடியாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நயன்தாராவைத் தங்களது படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க சீனியர் ஹீரோக்கள் முதல் ஜுனியர் ஹீரோக்கள் வரை எடுக்காத முயற்சிகள் இல்லை.
சிவகார்த்திகேயனே அதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றால் சிரஞ்சீவிக்குச் சொல்லவா வேண்டும். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 150வது படமான 'கத்தி' ரீமேக்கில் நயன்தாராவை அவருக்கு ஜோடியாக்க கடந்த சில மாதங்களாகவே முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள். அவர் கேட்கும் சம்பளத்தைக் கூடத் தரத் தயாராக இருந்தார்கள். ஆனாலும், ஏனோ நயன்தாரா பிடி கொடுக்காமல் இருந்தாராம். கடைசியில் சிரஞ்சீவியே நயன்தாராவுடன் நேரடியாகப் பேசிய பிறகு நடிக்க சம்மதித்துவிட்டார் என்கிறார்கள்.
உடனேயே, பாலகிருஷ்ணாவின் 100வது படமான 'கௌதமிபுத்ர சடகர்னி' படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை ஆரம்பித்துவிட்டார்கள். சிரஞ்சீவி படத்திற்கே எப்படியோ தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கொடுத்தவர் இதற்கு எப்படி கொடுக்கப் போகிறார் என டோலிவுட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.