தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தான் நடித்த தேவா படத்தில் இருந்தே பின்னணி பாடி வருபவர் விஜய். அதோடு தனது படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாக வேண்டும் என்றும் ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் தனது ஒவ்வொரு படங்களின் டியூன்களையும் தானே கேட்டு செலக்ட் பண்ணி வருகிறார். அப்படி விஜய் தேர்ந்தெடுக்கும் டியூன்களும் சூப்பர் ஹிட்டாகியும் வருகின்றன. அந்த வகையில், கத்தி, தெறி படங்களுக்குப்பிறகு பரதன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கான டியூன்களை தற்போது கேட்டு வருகிறாராம் விஜய்.
முதன்முறையாக விஜய்யின் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதோடு கபாலிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைக்கும் அவர், முதலில் விஜய்யை திருப்தி பண்ண வேண்டும் என்பதற்காக அவரது ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ற மெட்டுக்களை கொடுத்து ஓகே செய்து கொண்டிருக்கிறாராம். அந்த வகையில், தற்போது 60-வது படத்தில் விஜய்யின் ஓப்பனிங் பாடலுக்கான டியூன் ஓகேவாகி இசைக்கோர்ப்பு நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஏப்ரல் 11-ந்தேதியே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், மே 2-ந்தேதி முதல் சென்னை பின்னி மில்லில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதோடு, முதல் நாளே விஜய்யின் ஓப்பனிங் பாடல்தான் படமாக்கப்பட இருக்கிறதாம். அதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.