‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'கபாலி' படத்தின் டப்பிங்கை சமீபத்தில்தான் முடித்தார் ரஜினிகாந்த். கபாலியில் அவரது மகளாக நடிக்கும் தன்ஷிகா, ரஜினிக்குப் பிறகு டப்பிங் பேச ஆரம்பித்தார். அவரும் தன்னுடைய டப்பிங்கை முடித்துவிட்டார். இதற்கிடையில் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி 'கபாலி' படத்தின் 1 நிமிட டீஸர் யு டியூப்பில் வெளியாகிறது.
தற்போது, 'கபாலி' படத்தின் ரிலீஸ் பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் தாணு. எந்த தேதியில் கபாலி படத்தை ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும் என பல தரப்பினரிடமும் கருத்து கேட்டு வருகிறாராம். கபாலி படம் ஆரம்பித்தபோது கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் கலைப்புலி தாணு. ஆனால், 'கபாலி' படம் தொடங்கிய அதே சமயம் ரஜினியின் இன்னொரு படமான எந்திரன் 2ஆம் பாகமும் ஆரம்பமானதால் 'கபாலி' பட வேலைகள் தாமதமாகிவிட்டது.
தற்போது 'கபாலி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. போதாக்குறைக்கு தேர்தலும் வந்துவிட்டதால் மே மாதம் படத்தை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டார். மே 1 ஆம் தேதி வெளியாகும் டீஸரை அடுத்து, ஜுன் மாதம் முதல் வாரத்தில் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார். கபாலி படத்தை ரம்ஜான் பண்டிகை தினமான ஜூலை 7ஆம் தேதி வெளியிட தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தகவல்.