ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் மற்றும் டோலிவுட்டின் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வம்பிலும் மாட்டி வருகிறார். குறிப்பாக திரைநட்சத்திரங்களை அதிகமாக விமர்சிப்பார். இப்போது ஷாரூக்கானுக்கு அட்வைஸ் செய்வது போன்று கமலையும் வம்புக்கு இழுத்துள்ளார் ராம் கோபால் வர்மா. அப்படி என்ன சொன்னார் ராம் கோபால் வர்மா....?
ராம் கோபால் வர்மா தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... கமல் செய்த தவறை ஷாரூக்கான் செய்ய வேண்டாம். கமல், கமலாகவே இருந்திருந்தார் என்றால் ரஜினிகாந்தை விட சிறந்தவராக ஆகியிருக்க முடியும். ஷாருக்கான் சாதரண ரசிகராக மாறியுள்ளார். குள்ள மனிதன் மற்றும் இன்னும் ஏராளமான தவறுகளை கமல் செய்தது போல் இப்போது ஷாருக் செய்யத் துவங்கியுள்ளார். கமல் எப்படி ஸ்டார் அந்தஸ்த்தை ரஜினியிடம் இழந்தாரோ அதேப்போல் ஷாருக்கான் சல்மானிடம் இழக்க பார்க்கிறார். நான் ஷாருக்கை மெகாஸ்டார் என்றே அழைப்பேன். சல்மான் போன்று உடலில் தசைகள் இல்லை, அமீர்கான் போல் கடின உழைப்பு இல்லை எனினும் ஷாருக், ஷாருக்காக இருப்பதாலேயே அவர், சல்மான், அமீரை விட உயர்ந்தவராக இருக்கிறார். எனினும் கமல் செய்த தவறை ஷாரூக் செய்ய மாட்டார் என நம்புகிறேன்.