ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு அதற்கடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்கள் வெற்றி பெற்றபோதும், பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான் சூப்பர் ஹிட்டானது. சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கியது. அதேபோல் அதன்பிறகு அவர் நடித்த மான்கராத்தே, காக்கி சட்டை படங்களை விட மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் நடித்த ரஜினிமுருகன் படம் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு மெகா ஹிட்டாக அமைந்தது.
இந்த நிலையில், தற்போது அவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்தியனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு மீண்டும் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு அவர்கள் கூட்டணி அமைத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களைப்போன்று காமெடி கலந்த கதையில் உருவாகும் அந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் சூரி நடிக்கிறாராம்.