இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வருடம் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து ஆடிவிட்டுப்போன இனியாவுக்கு இப்போது 'வெள்ளக்கடுவா' என்கிற படத்தில் பிஜுமேனனுக்கு ஜோடியாக, படத்தின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் கதையை பாபு ஜனார்த்தனன் எழுதுகிறார். நான்கு படங்களை இயக்கியுள்ள கதாசிரியரான பாபு ஜனார்த்தனன் 'அச்சனுறங்காதவீடு', 'சிட்டி ஆப் காட்', 'காட் பார் சேல்' என உண்மைக்கு நெருக்கமான கதைகளை எழுதக்கூடியவர்.
ஆனால் இந்தப்படத்தை இயக்குகிறார் ஜோஸ் தாமஸ்.. திலீப்பை படம் முழுக்க பெண்ணாக நடிக்கவைத்து 'மாயமோகினி' என்ற படத்தை இயக்கினாரே அவர்தான்.. பிஜுமேனனுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இனியா, அவருடன் சேர்ந்து நடிப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்கிறார். இவர்கள் தவிர இந்தப்படத்தில் காமெடி நடிகர் இன்னொசண்ட நகைகடை முதலாளியாகவும் அதேசமயம் சினிமா தயாரிப்பாளராகவும் நடிக்கிறாராம். அவருடைய ட்ரைவர் கம் மேனேஜராக நடிக்கிறார் பிஜூமேனன.