‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஹவுஸ்புல் படத்தின் மூன்றாவது பாகமாக வெளிவர இருக்கும் படம் 'ஹவுஸ்புல்-3'. சாஜித் பர்கத் இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷ்ய்குமார், அபிஷேக்பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நர்கீஸ் பக்ரி, லிசா ஹெய்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் பேசியதாவது... ''ஹவுஸ்புல்-3 படத்தில் நான் நடிக்கிறேன் என்றபோது சற்று பயமாக இருந்தது. இதேப்போன்றதொரு பயம் 'தூம்' படங்களில் நடிக்கும்போது இருந்தது. எதற்காக நான் பயந்தேன் என்று சில சமயங்களில் எண்ணி வியப்பேன். ஹவுஸ்புல்-3 படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க தொடங்கிய பின்னர் அந்த பயம் விலகியது. என்னுடன் அக்ஷ்ய், ரித்தேஷ் என இரண்டு பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். இரண்டுபேரும் டைமிங்காக நன்கு காமெடி செய்வார்கள். இந்தப்படத்திற்காக கடினமாக உழைத்துள்ளேன், இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
'ஹவுஸ்புல்-3' படம் ஜூன் 3ம் தேதி வெளியாக இருக்கிறது