ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனேகன், மாரி, தங்கமகன் என சில படங்கள் வரிசையாக தனுஷை ஏமாற்றி விட்ட நிலையில், கொடி படத்தில் அதிக நம்பிக்கையுடன் இரண்டு வேடங்களில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இதுவரை பார்க்காத தனுஷை பார்க்க முடியுமாம். அதோடு, இதற்கு முன்பு அனேகனில் மூன்று விதமான கெட்டப்புகளில நடித்துள்ள தனுஷ், இந்த கொடியில் அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதிரடியான அடாவடி கேரக்டரில் திரிஷாவும், அமைதியான வேடத்தில் அனுபமா பரமேஸ்வரனும நடித்துள்ளனர்.
பிரபுசாலமனின் தொடரி படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு இந்த படத்திற்கு கால்சீட் கொடுத்து மின்னல் வேகத்தில் முடித்து விட்டார் தனுஷ். அந்த வகையில், இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், ஏற்கனவே இறுதிகட்ட பணிகள் முடிந்துள்ள தொடரி படத்தின் டப்பிங்கில் நேற்று முதல் ஈடுபட்ட தனுஷ், படத்திற்கான முழு டப்பிங்கையும் ஒரேநாளில் முடித்துவிட்டார் தனுஷ். இதை தன் டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் தனுஷ். கதைப்படி ரயில்வே கேன்டீன் டீபாய்க்கும், நடிகையின் டச்சப் பெண்ணுக்குமிடையிலான காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது.