இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் புதிய படம் வரும் 29ம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது. முதல் முறையாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் அவருடைய மகள் ஸ்ருதிஹாசனும் நடிக்க உள்ளார். இப்படத்தை மலையாள இயக்குனரான ராஜீவ் குமார் இயக்க உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையமைக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாகப் பணிபுரிந்த படம் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. இப்படம் வெளிவந்து 11 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
எப்படி இளையராஜாவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் இணைகிறாரோ அதே போலத்தான் படத்தை இயக்க உள்ள ராஜீவ் குமாருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய உள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்து மலையாளத்தில் வெளிவந்த 'சாணக்யன்' படத்தை 27 வருடங்களுக்கு முன் இயக்கியவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் கூட்டணி என்பதாலும், அப்பா - மகள் முதன் முறையாக நடிக்க உள்ள கூட்டணி என்பதாலும் இப்படம் நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இப்படத்தின் ஆரம்ப விழாவை வரும் 29ம் தேதி நடிகர் சங்க வளாகத்தில் கமல்ஹாசன் நடத்த உள்ளார்.