வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
'ஃபேன்' படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் நடித்து வரும் படம் 'ராயீஸ்'. ராகுல் தொலாக்கியா இயக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. ராயீஸ் படம், அஜய் தேவ்கனின் ஷிவ்வாய் படத்துடன் ரிலீஸாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தது. இந்நிலையில் தனது ராயீஸ் படத்தை ஷாரூக்கான் தள்ளி வைத்திருக்கிறார். இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல் இது, ஷாரூக்கான் தனது ராயீஸ் படத்தை அடுத்தாண்டு 2017 குடியரசு தின விழாவுக்கு ஒத்தி வைத்திருக்கிறார். படத்தின் பணிகள் முடிய தாமதமாகும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் அன்றைய தினம் ஏற்கனவே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாக இருக்கிறது. ஒன்று ஹிருத்திக் ரோஷனின் 'காபில்' படமும், அஜய் தேவ்கனின் 'பாத்ஷாகோ' படமும். இதில் ஹிருத்திக் படம் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. ஷாரூக், ஹிருத்திக்கின் தந்தை ராகேஷிடம் காபில் படத்தை தள்ளி வைக்கும்படி கேட்டுள்ளதாக தெரிகிறது. ஷாரூக்கின் வேண்டுகோளுக்கு ராகேஷ் சம்மதம் சொல்வாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்...!