பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
புதுமுகம் நேசம் முரளி இயக்கி நடிக்கும் படம் கொள்ளிடம். அவருக்கு ஜோடியாக லூதியா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்கள் தவிர ராசிக், வடிவுக்கரசி, வேல்முருகன், ராமச்சந்திரன் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ஆர்.ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். இது அழகில்லாதவனின் காதல் கதை என்கிறார் இயக்குனர் நேசம் முரளி. அவர் மேலும் கூறியதாவது:
மனிதர்களில் 20 சதகிவிதம் பேர்தான் அழகாக பிறக்கிறார்கள். 80 சதவிகிதம் பேர் அழகில்லாமல்தான் பிறக்கிறார்கள். அவர்களால் ஒருதலையாகத்தான் காதலிக்க முடியும், காதலை அவர்கள் சொல்ல நினைக்கும்போதெல்லாம் தன்னை பற்றிய தாழ்வு மனப்பாண்மை அவர்களை தடுத்து நிறுத்திவிடும். அதையும் மீறி தேவதை மாதிரி ஒருத்தி அவனுக்கு அமையும்போது அவனுக்கு இந்த உலகமே அழகாக தெரியும். அப்படி ஒரு அழகில்லாதவனின் காதல் கதை இது. சொந்த அழகை குறைத்து நடிக்க வேண்டும் என்று பல ஹீரோக்களிடம் கேட்டபோது மறுத்ததாதல் நானே அந்த கேரக்கடரில் நடிக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் வெளிவருகிறது. என்கிறார் நேசம் முரளி.