தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அக்குபன்ஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சொந்த படம் மூலம் பவர் ஸ்டார் சினிவாசனாக சினிமாவுக்கு வந்தார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகராக இருந்தார். சினிமா நடிகர் ஆன பிறகு அரசியலுக்குள் நுழைய முயன்றார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியில் சேர முயன்றார். சீனிவாசன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பதால் அந்த கட்சிகள் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை.
இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். அந்தக் கட்சியும் பச்சைக்கொடி காட்ட நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். சீனிவாசன் பற்றிய தகவல்களை சேகரித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு அனுப்ப பலர் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.
பா.ஜ.கவில் சேர்ந்தது பற்றி சீனிவாசன் கூறும்போது... “நான் எதையும் எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை. கட்சியின் கொள்கையும் பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடுகளும் பிடித்து சேர்ந்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்வேன். எனது ரசிகர் மன்றமும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்கும் என்கிறார்.