பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வரும் மே-21ஆம் தேதி அன்று மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் பிறந்தநாள் வருகிறது. அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவரது ரசிகர்கள் தடபுடலாக ஒருபக்கம் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு படி மேலாக அவரது ரசிகர்கள் மோகன்லாலின் புதிய படமாக உருவாகி வரும் 'புலி முருகன்' படம், வரும் ஜூலையில் வெளியாவதை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே படத்தின் முதல் நாள் புக்கிங்கை துவக்கி அனைத்து காட்சிகளையும் ஹவுஸ்புல்லாக்கி வைத்து புதிய சாதனையை படைத்து அதை மோகன்லாலுக்கு சமர்ப்பித்தும் விட்டனர்.
அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு மோகன்லால் தனது பிறந்தநாளில் ஒரு பரிசு தர இருக்கிறார்.. ஆம்.. தான் தற்போது நடித்துவரும் 'புலிமுருகன்' படத்தின் டீசரை அன்றைய தினம் வெளியிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவுள்ளார். வைசாக் என்பவர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப்படம்தான் இதுநாள் வரை மலையாள சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் படம் என்கிற சாதனையை செய்யவுள்ளது. இந்தப்படத்தில் இளையதிலகம் பிரபு, கமாலினி முகர்ஜி, நமீதா, சுராஜ் வெஞ்சாரமூடு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.