ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்த விஷால், அப்படத்தைத் தொடர்ந்து 'மருது' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சுராஜ் இயக்கத்தில் கத்திச்சண்டை படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் அடுத்தப் படமாக மருது படம் வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், விஷால் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக ஏப்ரல் 29 அன்று மதகஜராஜா வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து, பல வருடங்களாக ரிலீஸாகமல் இருக்கும் படம் 'மத கஜ ராஜா'. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த 'மத கஜ ராஜா' படத்தின் தயாரிப்பாளர் கடன் பிரச்சனை காரணமாக மத கஜ ராஜா படத்தின் ரிலீஸ் பிரச்சனைக்குள்ளானது. அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் பல முறை தள்ளிக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், மத கஜ ராஜா படத்தை வரும் ஏப்ரல் 29 அன்று தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வந்தது. சுந்தர்.சி. இயக்கிய, அரண்மனை 2 படம் ஹிட்டானதால் 'மத கஜ ராஜா' படத்துக்கு ஓபனிங் இருக்கும் என்பதாலும் இந்த முயற்சியை செய்தனர். ஏற்கனவே விஷாலே இப்படியொரு முயற்சியில் இறங்கி தோற்றுப்போனதால் இந்த தடவை அவர் தலையிடவில்லை. அதே நேரம் மதகஜராஜா வெளியாக என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ஏப்ரல் 29 அன்று தேதி ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்ட மதகஜராஜா படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.