மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
'பீட்சா' 'ஜிகர்தண்டா' படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தற்போது இறைவி படத்தை இயக்கி வருகிறார். விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடித்திருக்கும் 'இறைவி' வரும் மே 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் படத்தை அடுத்து இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
கடந்த சனிக்கிழமை அன்று தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இளம் திறமையாளர் ஒருவரது இயக்கத்தில் நடிக்க உள்ளேன். அவர் யார் என்று இன்று இரவு சொல்கிறேன். அவர் யார் என யூகியுங்கள் என்கிற ரீதியில் ட்வீட்டினார். தன்னுடைய ட்வீட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளறும் என்று எதிர்பார்த்தார் தனுஷ். ஆனால் நடந்ததோ வேறு.
தனுஷ் ட்வீட் போட்ட சற்று நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்று ரிப்ளை கொடுத்தார் காமெடி நடிகர் கருணாகரன். அதனால் தனுஷ் எதிர்பார்த்த சஸ்பென்ஸ் கிடைக்கவில்லை. அன்று இரவு அவர் கார்த்திக் சுப்புராஜ் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தபோது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதனால் தனுஷ் சற்றே அப்செட்டானது மட்டுமல்ல, கருணாகரன் மீதான தன்னுடைய கடுப்ரையும் தன் நண்பர்கள் மத்தியில் வெளிப்படுத்தினாராம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களில் எல்லாம் கருணாகரன் தவறாமல் இருப்பார். இந்த விவகாரத்தினால் அனேகமாக தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் கருணாகரன் இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது.