ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல நடிகை நமீதா, நண்பர்கள் வழங்கிய ஆலோசனையை அடுத்து, அ.தி.மு.க.,வில் இணைந்தது தெரியவந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகளில், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து, சேர்ந்து வருகின்றனர். நடிகை நமீதாவும், லோக்சபா தேர்தலின் போதே, அரசியலில் குதிக்க முடிவு செய்தார்.
திடீரென நீங்களாக ஒரு கட்சியில் சேராதீர்கள்; உங்களை விரும்பும் கட்சி யில் சேர்ந்தால் தான் ஜொலிக்க முடியும் என, நண்பர்கள், பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆலோசனையை ஏற்று, முடிவை தற்காலிகமாக தள்ளிவைத்தார்.
பின், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளின் வரலாறு குறித்த புத்தகங்களை, வாங்கி படித்து வந்தார். சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும், நண்பர்கள், நெருங்கிய பத்திரிகையாளர்களுடன் மீண்டும் ஆலோசித்தார். அ.தி.மு.க.,வில் சேர்ந்தால் தான் பலன் இருக்கும்; நீங்களே, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்யுங்கள் என, ஆலோசனை கூறினர்.
உடனே, அதற்கான முயற்சிகளை எடுத்த நமீதா, முதல்வரின் நேரடி உதவியாளர் மூலமாக, கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து, கடிதம் கொடுத்தார்.
அ.தி.மு.க.,வில் தேர்தல் பிரசாரத்துக்கு கவர்ச்சியான முகம் தேவை என்பதால், உடனடியாக, அவரை கட்சி யில் சேர்த்துக் கொள்ள ஜெ., சம்மதித்தார். இதையடுத்து, திருச்சியில் நடந்த வேட்பாளர் பிரசார கூட்டத்தில், ஜெயலலிதாவை சந்தித்து, தன்னை கட்சியில் இணைந்துக் கொண்டார் நமீதா.
பின் நமீதா கூறுகையில், அ.தி.மு.க.,வில் சேர வேண்டும் என்பது, நீண்ட கால ஆசை; அந்த ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி. முதல்வர், மக்களுக்கு நிறைய நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மீண்டும், அவர் முதல்வர் ஆவார்; அதற்காக, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன், என்றார்.
தமிழகம் முழுவதும் சுற்றி வந்து, பிளையிங் கிஸ் கொடுத்து, மச்சான்ஸ்... நடிகை பிரசாரம் மூலம், மக்களையும், இளைஞர்களையும் ஈர்க்க, தயாராகி வருகிறார்.