துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தெறி படத்தைத் தொடர்ந்து அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் 60 படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என 2 நாயகிகள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு 2 வில்லன்கள் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. அதன்படி வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் பெரிதும் பேசப்பட்டதால் விஜயின் 60லும் வில்லனாக டேனியல் பாலாஜியை புக் செய்துள்ளனர். டேனியல் பாலாஜி மற்றும் ஜெகபதி பாபு என 2 வில்லன்களுடன் விஜய் மோதவிருக்கிறார். மேலும் ஸ்ரீமன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஸ் உத்தமன், மைம் கோபி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமாறன் ஒளிப்பதிவு செய்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தை போல் இப்படத்திலும் யதார்த்த வில்லனாக டேனியல் பாலாஜி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.