ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்போது, கொடி, தொடரி, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய 3 படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன. இதில் கொடி மற்றும் தொடரி படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என்னை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமொன்றிலும் தனுஷ் நடிக்கவுள்ளார்.கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் இணையும் புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். தனுஷ்னுடன் , கருணாகரன் ஒரு முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.