வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கஞ்சே எனும் தேசிய விருது வென்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெற்ற ப்ரக்யா விரட்டு எனும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார். ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள ப்ரக்யா அடுத்ததாக நாகார்ஜூனாவின் பக்திப் படமான ஹாதிராம் பாபா படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் நடிப்பது குறித்து ப்ரக்யாவிட படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பெருமாள் பக்தர் ஹாதிராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இப்படத்தில் நாகார்ஜுனா ஹாதிராம் பாபாவாக நடிக்கின்றார். பெருமாள் வேடத்தில் நடிகர் சுமன் நடிக்கின்றார். நாகார்ஜுனாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற அன்னமய்யா, ஸ்ரீராமதாசு, ஸ்ரீரடி சாய் போன்ற பக்தி படங்களை இயக்கிய இயக்குனர் ராகவேந்திர ராவ் இப்படத்தையும் இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாம். ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என கூறப்படுகின்றது.